Images
  • delhi
    படம்: REUTERS

புது டில்லியில் கடுமையான காற்றுத் தூய்மைக்கேடு : சரக்கு வாகனங்களுக்குத் தடை

இந்தியத் தலைநகர் புது டில்லியில் காற்றுத் தூய்மைக்கேடு ஆபத்தான அளவுக்குச் சென்றுள்ளதால் தற்போது அந்த மாநகருக்குள் சரக்கு வண்டிகள் நுழைய 3-நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் கிட்டத்தட்ட 40,000 நடுத்தர, கனரக லாரிகள் புதுடில்லிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உணவும் அத்தியாவசியப் பொருள்களும் ஏற்றிவரும் லாரிகளுக்கு அந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டீசலில் இயங்கும் பெரிய குடும்பக் கார் (SUVs) உரிமையாளர்கள் கார்களைக் கைவிட்டுப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுவாக பனிக் காலங்களில் புது டில்லி காற்றுத் தூய்மைக்கேட்டால் அதிகமாக பாதிக்கப்படும்.

தற்போது தீபாவளிக்குக் கொளுத்தப்பட்ட பட்டாசுகளால் காற்றுத் தரம் மேலும் மோசமடைந்துள்ளது.

பொதுமக்கள் முடிந்த வரை வீட்டிற்குள் இருக்கும்படியும் அல்லது சுவாசக் கவசம் அணிந்து கொள்ளும் படியும் நிபுணர்கள் கேட்டுக்கொண்டனர். 

Top