Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

டெல்ட்டா வகைக் கிருமியால் தடுமாறும் தென் கொரியா - முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்கும் நோய்த்தொற்று

டெல்ட்டா வகைக் கிருமியால் தடுமாறும் தென் கொரியா - முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்கும் நோய்த்தொற்று

வாசிப்புநேரம் -

தென் கொரியாவில், முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று புதிதாக 1,784 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேகமாகப் பரவும் டெல்ட்டா வகைக் கிருமியால் நோய்த்தொற்று அதிகரித்து வருவதாகத் தென் கொரிய நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு அமைப்பு கூறியது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஈராயிரத்துக்கும் அதிகமானோரிடம் நடத்தப்பட்ட மரபணுச் சோதனையில் 40 விழுக்காட்டினரிடம் டெல்ட்டா வகைக் கிருமி கண்டறியப்பட்டது.

சென்ற டிசம்பரிலிருந்து கண்டறியப்பட்ட மொத்தம் 1,741 டெல்ட்டா வகைக் கிருமித்தொற்றுச் சம்பவங்களில் பாதிக்கும் மேல் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டன.

தென் கொரியாவில் 52 மில்லியன் மக்கள்தொகையில் 32 விழுக்காட்டினர் ஒருமுறையாவது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

செப்டம்பருக்குள் அந்த விகிதத்தை 70 விழுக்காட்டுககு உயர்த்த தென் கொரிய அரசாங்கம் திட்டமிடுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்