Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அமெரிக்காவுடன் அணுவாயுதக் களைவு குறித்துப் பேசப்போவதில்லை: வட கொரிய தூதர்

அமெரிக்காவுடன் அணுவாயுதக் களைவு குறித்துப் பேசப்போவதில்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான வட கொரியத் தூதர் கிம் சொங் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவுடன் அணுவாயுதக் களைவு குறித்துப் பேசப்போவதில்லை: வட கொரிய தூதர்

(படம்: REUTERS/Brendan McDermid)

அமெரிக்காவுடன் அணுவாயுதக் களைவு குறித்துப் பேசப்போவதில்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான வட கொரியத் தூதர் கிம் சொங் தெரிவித்துள்ளார்.

தன் சொந்த விருப்பத்தை முன்னிறுத்தியே வாஷிங்டன் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் திரு. டிரம்ப்பின் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள, வெள்ளை மாளிகை அணுவாயுதக் களைவு விவகாரத்தைப் பயன்படுத்துவதாக வட கொரியா நம்புகிறது.

அமெரிக்காவுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேவை தற்போது இல்லை என்று வட கொரியத் தூதர் கிம் கூறினார்.

அணுவாயுதக் களைவின் தொடர்பில் அமெரிக்கா அதன் கொள்கையை மாற்றிக் கொள்ள இந்த ஆண்டு இறுதிவரை வட கொரியா காலக்கெடு விதித்துள்ளது.

அணுவாயுதத் திட்டங்களை முழுமையாகக் கைவிடுவதற்கு முன்னர் தன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் வட கொரியா வலியுறுத்தி வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்