Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

என் சாப்பாடு என் உரிமை: Disneyland மீது மாணவி வழக்கு

சீனாவைச் சேர்ந்த மாணவி ஒருவர், அமெரிக்கக் கேளிக்கை நிறுவனமான டிஸ்னி மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
என் சாப்பாடு என் உரிமை: Disneyland மீது மாணவி வழக்கு

படம்: Reuters/Aly Song

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சீனாவைச் சேர்ந்த மாணவி ஒருவர், அமெரிக்கக் கேளிக்கை நிறுவனமான டிஸ்னி மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

அந்த நிறுவனம், தனது ஆசியக் கேளிக்கைப் பூங்காங்களுக்குள் வருகையாளர்கள் சொந்த உணவை எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து அவர் வழக்குத் தொடுத்துள்ளார்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள டிஸ்னி கேளிக்கைப் பூங்காக்களில் சொந்த உணவை எடுத்துச் செல்லத் தடையில்லை.

ஆனால், தோக்கியோ, ஹாங்காங், ஷங்ஹாய் என ஆசியாவிலுள்ள பூங்காக்களில் மட்டும் ஏனிந்தத் தடை என்று கொதித்து எழுந்துவிட்டார் மாணவி வாங்.

'டிஸ்னி இரட்டை வேடம் போடுகிறது' என்று அவர் சாடினார்.

ஷங்ஹாய் டிஸ்னி கேளிக்கைப் பூங்காவினுள் தமது சொந்த உணவை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டதன்மூலம் தமது உரிமை மீறப்பட்டுவிட்டதாக வாங் குறிப்பிட்டார்.

நியாயமற்ற அந்தத் தடையால், மிதமிஞ்சிய விலை கொடுத்துப் பூங்காவினுள் உணவு வாங்க நேரிட்டதாகச் சொன்னார் வாங்.

Twitter-ரைப் போன்ற Weibo தளத்தில், அவரது கதை வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 600 மில்லியன் முறை அது வாசிக்கப்பட்டுள்ளது.

எத்தனையோ பார்வையாளர்கள் இந்த நியாயமற்ற செயலைக் கண்டித்துப் புலம்பியிருப்பார்கள்; அதை எதிர்த்து வழக்குத் தொடுக்க நினைத்தாலும் அதற்காகும் செலவையும் நேரத்தையும் நினைத்துப் பார்த்து அந்த முடிவைக் கைவிட்டிருப்பார்கள் ; ஆனால், ஒரு சட்டக்கல்லூரி மாணவியான தாம் இதைச் சும்மா விடப்போவதில்லை என்று சூளுரைத்திருக்கிறார் மாணவி வாங்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் The People's Daily நாளேடும் மாணவிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அந்தப் பிரச்சினை குறித்து பதிலளிக்க, ஷங்ஹாய் டிஸ்னிலேண்ட் மறுத்துவிட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்