Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'போராடுவோம், போராடுவோம்!...நாய் இறைச்சி சாப்பிட்டுப் போராடுவோம்!': தென்கொரிய விவசாயிகள்

விலங்குநல உரிமை ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்த்துப் போராடினர் தென்கொரிய விவசாயிகள் சிலர். 

வாசிப்புநேரம் -
'போராடுவோம், போராடுவோம்!...நாய் இறைச்சி சாப்பிட்டுப் போராடுவோம்!': தென்கொரிய விவசாயிகள்

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

விலங்குநல உரிமை ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்த்துப் போராடினர் தென்கொரிய விவசாயிகள் சிலர்.

நாய் இறைச்சி உட்கொள்வதை எதிர்த்துப் போராடியவர்களுக்கு எதிரே நின்று நாய் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டே விலங்குநல ஆர்வலர்களுக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தென்கொரியாவில் ஆண்டுக்குச் சுமார் ஒரு மில்லியன் நாய்கள் உணவுக்காகக் கொல்லப்படுகின்றன.

நாய்களைச் செல்லப்பிராணிகளாக மக்கள் வளர்க்கத் தொடங்கியுள்ளதால் நாய் இறைச்சி மீதான ஈர்ப்பு கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்துவந்துள்ளது.

நாய் இறைச்சி சாப்பிடுவதால் உடல்நலத்துக்குப் பல பயன்கள் உண்டு என்றனர் சிலர்.

அதிக வெப்பமான கோடைகாலத்தில் நாய் இறைச்சியை உண்பது உடலுக்கு நல்லது என்பது தென்கொரியாவில் பாரம்பரிய நம்பிக்கை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்