Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நிலச்சரிவிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்றிய நாய்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு 37 பேர் மரணமடைந்தனர்.

வாசிப்புநேரம் -
நிலச்சரிவிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்றிய நாய்

( படம்: AFP/WILLIAM WEST )

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு 37 பேர் மரணமடைந்தனர்.

வெள்ளத்தால் ஏற்பட்ட நிலநடுக்கத்திலிருந்து ஒரு குடும்பம் விநோதமான முறையில் பிழைத்துக்கொண்டது.

இரவு உறங்கிக்கொண்டிருந்தபோது குடும்பத்தின் செல்லப்பிராணி ராக்கி திடீரென்று குரைக்கத் தொடங்கியது.

அதை மோகனன் குடும்பத்தினர் முதலில் புறக்கணித்தனர். நாய் குரைப்பதை நிறுத்தவில்லை. தொடர்ந்து சத்தமாக ஊளையிட்டது.

ஏதோ துயரத்தில் குரைப்பதுபோல் இருந்த ராக்கியின் ஊளைச் சத்தம் வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது.

ராக்கியை கவனிக்க வீட்டிற்கு வெளியே வந்த குடும்பத்தினர் அடுத்து நிகழப்போவதை உணர்ந்தனர்.

இன்னும் சில நிமிடங்களில் தங்கள் வீட்டைப் பாதிக்கவிருந்த நிலச்சரிவிலிருந்து அவர்கள் சரியான நேரத்தில் தப்பியோடினர்.

அதே கட்டடத்தில் ஒரு மாடி மேலே வசித்த தம்பதி நிலச்சரிவில் உயிரிழந்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்