Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நாய்களுக்குச் சட்டவிரோதமான பெயர்களை வைத்ததால் கைது செய்யப்பட்ட சீன ஆடவர்

சீனாவின் கிழக்குப் பகுதியில் தன் நாய்களுக்குச் சட்டவிரோதமான பெயர்களை வைத்ததற்காக 30 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட பான் எனப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சீனாவின் கிழக்குப் பகுதியில் தன் நாய்களுக்குச் சட்டவிரோதமான பெயர்களை வைத்ததற்காக 30 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட பான் எனப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்ஹுய் மாநிலத்தைச் சேர்ந்த திரு பான் தன்னிடம் புதிதாக 'செங்குவான்', 'ஸியேகுவான்' என்று பெயர்கொண்ட இரு நாய்கள் இருப்பதாக WeChat தளத்தில் தெரிவித்தார் என்று பெய்ச்சிங் நியூஸ் கூறியது.

'செங்குவான்' என்பது நகரங்களில் சிறிய குற்றங்களைச் சமாளிக்கப் பணியமர்த்தப்படும் அதிகாரிகளைக் குறிப்பதாகவும், 'ஸியேகுவான்' என்ற பெயர் தனிப்பட்ட முறையில் சமூக சேவை செய்பவர்களைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

திரு பான் வேடிக்கைக்காக நாய்களுக்கு அப்படிப்பட்ட பெயர்களை வைத்ததாக அந்தப் பத்திரிகை தெரிவித்தது.

ஆனால் அது அவமதிக்கும் செயல் என்று தீர்மானித்த அதிகாரிகள், அவர் ஸியாங்யாங் நகரிலுள்ள நிர்வாகத் தடுப்பு நிலையத்தில் 10 நாள்கள் வைக்கப்படுவதற்கு உத்தரவிட்டனர்.

தான் செய்தது சட்டவிரோதம் என்பது தனக்குத் தெரியாது என்று திரு பான் பெய்ச்சிங் நியூஸ் பத்திரிகையிடம் குறிப்பிட்டார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்