Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உரிமையாளர்களுக்காக பை ஏந்திச்செல்லும் நாய்

உரிமையாளர்கள் பந்தைத் தூக்கிப்போட்டால், நாய்கள் அப்பந்தைப் பிடித்து அவர்களிடம் திருப்பிக்கொடுப்பது வழக்கமாகப் பார்க்கக்கூடிய காட்சி.

வாசிப்புநேரம் -
உரிமையாளர்களுக்காக பை ஏந்திச்செல்லும் நாய்

(படம்: Nahur Bhai/Facebook)

உரிமையாளர்கள் பந்தைத் தூக்கிப்போட்டால், நாய்கள் அப்பந்தைப் பிடித்து அவர்களிடம் திருப்பிக்கொடுப்பது வழக்கமாகப் பார்க்கக்கூடிய காட்சி.

ஆனால் நாய்கள் தங்களது உரிமையாளர்களுக்காக பை ஏந்திச் செல்வதை நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்போம்?

மலேசியாவில் அவ்வாறு செய்துள்ளது ஒரு நாய்.

அத்தகைய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

கோலாலம்பூரில் எடுக்கப்பட்ட அந்தக் காணொளியில் ஒரு பெண் சாலையைக் கடக்கிறார்.

அவர் பின்னால், கறுப்பு நாய் ஒன்று அதன் வாயில் பெண்ணின் பையை ஏந்திக்கொண்டு செல்கிறது.

இணையவாசிகள் பலர் அக்காட்சியை வேடிக்கைமிக்கதாகக் கருதினாலும், சிலர் கட்டுப்பாட்டு வார் அணிவிக்காமல் நாயைப் பொது இடத்தில் அழைத்துச் சென்றதைச் சாடியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்