Images
  • dog
    படம்: AFP

நடுக்கடலில் தத்தளித்த நாயை உயிருடன் மீட்ட ஊழியர்கள்

தாய்லந்தில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நாய்க்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

தாய்லந்துக் கடற்கரைக்குச் சுமார் 220 கிலோமீட்டர் அப்பால் அந்த நாய் கண்டுபிடிக்கப்பட்டது.

எண்ணெய்த் துரப்பண மேடைப் பணியாளர்கள் சிலருக்கு படகில் சென்றுகொண்டிருந்தபோது நடுக்கடலில் நாயின் தலை தென்பட்டது.

அந்தப் பழுப்பு நிற நாய் எப்போது, எப்படிக் கடலில் விழுந்தது என்பது தெரியவில்லை.

எவ்வளவு நேரமாக அது கடலில் தத்தளித்தது என்பதும் தெரியவில்லை.

அது மீன்பிடிப் படகிலிருந்து விழுந்து, துரப்பண மேடை நோக்கிச் சென்றிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

நாய் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாயைக் காப்பாற்றிய ஊழியர், அதைத் தத்தெடுக்க உறுதியளித்துள்ளார்.

ஓர் உயிரின் மதிப்பை உணர்ந்து காப்பாற்றிய ஊழியர்களுக்கு இணையவாசிகள் மனதார நன்றி தெரிவித்து வருகின்றனர்.

 

 

Top