Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பொது இடத்தில் நாயை நடக்க அழைத்துச் சென்றால், அவற்றைக் கொல்ல உத்தரவிட்டிருக்கும் சீன நகரம்

சீனாவின் யுனான் (Yunnan) மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரில், நாய்களை பொது இடங்களில் நடக்க அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை மீண்டும் பரிசீலிக்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -
பொது இடத்தில் நாயை நடக்க அழைத்துச் சென்றால், அவற்றைக் கொல்ல உத்தரவிட்டிருக்கும் சீன நகரம்

(படம்: REUTERS/Annegret Hilse)

சீனாவின் யுனான் (Yunnan) மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரில், நாய்களை பொது இடங்களில் நடக்க அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை மீண்டும் பரிசீலிக்கப்படுகிறது.

அந்தத் தடை இம்மாதம் 20ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரவிருந்தது.

தடையை முதல் இரண்டு முறை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.

தடையை மூன்றாவது முறை மீறுவோரின் செல்லப்பிராணிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை கொல்லப்படும் எனத் தடை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாக BBC செய்தி நிறுவனம் சுட்டியது.

கயிற்றால் கட்டப்படாத நாய்கள் குடியிருப்பாளர்களைக் கடிக்கும் சம்பவங்கள் ஏற்பட்டதை அடுத்து, தடை விதிக்க முடிவு எடுத்ததாக அதிகாரிகள் கூறினர்.

இருப்பினும், கடுமையான இந்த விதிமுறைக்கு இணையவாசிகள் சமூகத் தளத்தில் குறைகூறத் தொடங்கினர்.

"நாகரிகமான நாய் வளர்ப்புப் பழக்கங்களை ஊக்குவிக்க நாகரிகமற்ற தடையும் தண்டனையுமா?"

என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் செல்லப்பிராணிகளை எப்படிப் பொறுப்பாக வளர்ப்பது என்று சொல்லிக் கொடுக்கலாமே என்கின்றனர் இணையவாசிகள்.

அதையடுத்து, தடை குறித்து மீண்டும் பரிசீலிக்கப்போவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்