Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கடல் போக்குவரத்து குறைந்துள்ளதால் ஹாங்காங் நீர்நிலைகளுக்குத் திரும்பும் அரிய இளஞ்சிவப்பு டால்ஃபின்கள்

ஹாங்காங், மக்காவ் ஆகியவற்றுக்கு இடையிலான நீர்நிலைகளுக்கு மீண்டும் திரும்புகின்றன அரிய இளஞ்சிவப்பு வகை டால்ஃபின்கள்.

வாசிப்புநேரம் -
கடல் போக்குவரத்து குறைந்துள்ளதால் ஹாங்காங் நீர்நிலைகளுக்குத் திரும்பும் அரிய இளஞ்சிவப்பு டால்ஃபின்கள்

(படம்: AFP/Daniel Sorabji)

ஹாங்காங், மக்காவ் ஆகியவற்றுக்கு இடையிலான நீர்நிலைகளுக்கு மீண்டும் திரும்புகின்றன அரிய இளஞ்சிவப்பு வகை டால்ஃபின்கள்.

கொரோனா கிருமித்தொற்றின் காரணமாகக் கடல் போக்குவரத்து குறைந்துள்ளதால் டால்ஃபின்களை மீண்டும் அங்குக் காணமுடிகிறது.

எனினும் பரபரப்பான கடல் பகுதியில் வாழும் அவை, நீண்டகாலம் நிலைத்திருப்பது சந்தேகமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை 80 விழுக்காடு வரை குறைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

எனினும் இந்த ஆண்டு அவற்றின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

பிப்ரவரி மாதத்திலிருந்து கப்பல்கள், படகுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் டால்ஃபின்களை ஆய்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த ஐந்தாண்டுகளில் காணாத அளவில் குழுக்களாகத் திரளும் டால்ஃபின்கள் ஒன்றுடன் ஒன்று பழகுவதாக ஆய்வாளர்கள் கூறினர்.

மார்ச் மாதத்திலிருந்து டால்ஃபின்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்