Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் டாக்டர் மகாதீர் போட்டி

மலேசிய எதிர்த்தரப்புக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் டாக்டர் மகாதீர் முகமது, லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
மலேசியா: லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் டாக்டர் மகாதீர் போட்டி

டாக்டர் மகாதிர் முகமது. படம்: AFP/Mohd Rasfan

மலேசிய எதிர்த்தரப்புக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் டாக்டர் மகாதீர் முகமது, லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருக்கிறார்.

அவரது சொந்த மாநிலமான கெடாவில் அமைந்துள்ளது லங்காவி. எதிர்வரும் பொதுத்தேர்தலில், அங்கு போட்டியிடுவது குறித்து டாக்டர் மகாதீர் நேற்று அறிவித்தார்.

லங்காவி அனைத்துலக விமானநிலையத்துக்கு அருகே அமைந்திருக்கும் திடலில், அவர் உரையாற்றினார்.

மலேசியாவின் நீண்டகாலப் பிரதமராகச் செயல்பட்ட டாக்டர் மகாதீர், லங்காவி சுற்றுலாத்துறை நடுவமாக மேம்பாடு கண்டதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறார்.

தேர்தலில் எதிர்த்தரப்பு வெற்றிபெற்றால், இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்க டாக்டர் மகாதீர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படவேண்டியது அவசியம்.

இம்மாதம் 28ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தினம். 92 வயது டாக்டர் மகாதீர் லங்காவி தொகுதி வேட்பாளராக, அன்று அதிகாரபூர்வமாக விண்ணப்பிப்பார்.

அன்றிலிருந்து, அவர் பிரச்சாரம் செய்ய 11 நாட்கள் அவகாசம் உண்டு. மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தலில் அடுத்த மாதம் 9ஆம் தேதி வாக்களிப்பு நாள்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்