Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் தலைவர் பதவி விலக வலியுறுத்தி கறுப்புச் சட்டை அணிந்து பேரணி

ஹாங்காங்கில் கறுப்புச் சட்டை அணிந்து ஆயிரக்கணக்கானோர் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஹாங்காங் தலைவர் பதவி விலக வலியுறுத்தி கறுப்புச் சட்டை அணிந்து பேரணி

(படம்: AFP)

ஹாங்காங்கில் கறுப்புச் சட்டை அணிந்து ஆயிரக்கணக்கானோர் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

நேற்று ஹாங்காங் தலைவர் கெரி லாம் சர்ச்சைக்குரிய மசோதாவைத் தற்காலிகமாக ரத்துசெய்தார். அதனைத் தொடர்ந்து அவரைப் பதவி விலக வலியுறுத்தும் பேரணி நடைபெறுகிறது.

நிரந்தரமாக அந்த மசோதா கைவிடப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் மக்கள் பேரணியில் பங்கேற்றனர். விக்டோரியா பூங்காவில் தொடங்கி ஹாங்காங்கின் மத்திய வட்டாரத்திலுள்ள அரசாங்க அலுவலங்களுக்கு மக்கள் பேரணியாகச் சென்றனர். சிலர் கையில் வெள்ளைப் பூக்களை ஏந்தி சென்றனர்.

சிலவகைக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவோரை வழக்கு விசாரணைக்காக சீனாவுக்கு அனுப்பிவைப்பதை அனுமதிக்கும் மசோதா குறித்து ஹாங்காங்வாசிகள் பலர் அதிருப்தி தெரிவித்தனர்.

அந்த சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து கடந்த சில நாள்களாக ஹாங்காங்கில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்