Images
  • meth
    (படம்: AFP)

சுமார் 600 கிலோகிராம் போதைப்பொருளைக் கைப்பற்றிய மலேசியக் காவல்துறையினர்

மலேசியாவின் காவல்துறையினர் சுமார் 600 கிலோகிராம் எடைகொண்ட போதைப்பொருளை வார இறுதியில் கைப்பற்றியதாக இன்று (ஜனவரி 14) கூறியுள்ளனர்.

இரண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகயில் அது சாத்தியமானது.

Shabu என்று மலேசியாவில் அழைக்கப்படும் 1.2 டன் எடை கொண்ட போதைப்பொருளைச் சில மாதங்களுக்கு முன் அந்நாட்டுக் காவல்துறையினர் கைப்பற்றினர்.

தேநீர் என்ற பெயரில் அந்த போதைப்பொருள் மியன்மாரில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டது.

39 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட 3 ஆடவர்கள், பேராக்கின் மூன்று இடங்களில் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.
 

Top