வியட்நாம்: 600 கிலோகிராம் போதைப்பொருள் பிடிபட்டது
வியட்நாமின் மத்தியப் பகுதியில், 600 கிலோகிராம் எடையுள்ள Methamphetamine எனும் போதைப்பொருளை அந்நாட்டுக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
வியட்நாமின் மத்தியப் பகுதியில், 600 கிலோகிராம் எடையுள்ள Methamphetamine எனும் போதைப்பொருளை அந்நாட்டுக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
வியட்நாமில், ஆக அதிகமான போதைப் பொருள் பிடிபட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்று.
பிடிபட்ட போதைப்பொருள் ஒரு வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், வேறு இடத்திற்கு மாற்றப்பட அது காத்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு முதிய தம்பதி வசித்த வீட்டைக் காவல்துறையினர் சுற்றி வளைத்துச் சோதனையிட்டு அந்த போதைப் பொருளைக் கைப்பற்றினர்.
அந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியட்நாமில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
காவல்துறை அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.