Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சாலையோரமாகக் கிடந்த 900 கிலோகிராம் போதைப்பொருள்

சாலையோரமாகக் கைவிடப்பட்டுக் கிடந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட போதைப்பொருளை வியட்நாமியக் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

வாசிப்புநேரம் -
சாலையோரமாகக் கிடந்த 900 கிலோகிராம் போதைப்பொருள்

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சாலையோரமாகக் கைவிடப்பட்டுக் கிடந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட போதைப்பொருளை வியட்நாமியக் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

உப்பு ஆலைக்கு அருகில் உள்ள சாலையில் நிறைய பொட்டலங்கள் இருப்பதை அங்குள்ள குடியிருப்பாளர்கள் கண்டனர்.

அவை உப்பு அல்லது குப்பை நிறைந்த பைகள் என்று முதலில் நம்பப்பட்டது. பின்னர் அவற்றில் 900 கிலோகிராம் எடையுள்ள methamphetamine போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.

சம்பவத்தில் தொடர்புள்ள 5 பேரை அடையாளம் கண்டு மூவரைக் கைது செய்துள்ளது காவல்துறை.

வியட்நாமிலிருந்து வெளிநாட்டுக்கு அந்த போதைப்பொருள் ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாக நம்பப்படுகிறது.

ஒரு முதிய தம்பதியின் வீட்டில் சுமார் 600 கிலோகிராம் போதைப்பொருள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது சில நாள்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.

வியட்நாமில் போதைப்பொருளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் உள்ளன. 2.5 கிலோகிராமுக்கும் அதிகமான methamphetamine போதைப்பொருளுடன் பிடிபடுவோர் மரண தண்டனையை எதிர்நோக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்