Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மாவ் ஷான் வாங் வகை டுரியானை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய மலேசியா திட்டம்

மாவ் ஷான் வாங் வகை டுரியானை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய மலேசியா திட்டம்

வாசிப்புநேரம் -
மாவ் ஷான் வாங் வகை டுரியானை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய மலேசியா திட்டம்

( படம்: AFP/Romeo GACAD )

சீனாவிற்கு அடுத்த ஆண்டில் இருந்து மாவ் ஷான் வாங் வகை டுரியானை ஏற்றுமதி செய்ய மலேசியா திட்டமிட்டுள்ளது.

அதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என மலேசியா எதிர்பார்க்கிறது.

சீனாவுடன் ஏற்றுமதிக்கான பேச்சுவார்த்தை நல்லமுறையில் இருந்ததாக மலேசிய வேளாண்துறை அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.

பழத்தின் பாதுகாப்பு பற்றி சீனா ஆய்வுசெய்வதாகவும், ஏற்றுமதிக்கான ஒப்புதல் அடுத்த ஆண்டிற்குள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போது சீனாவிற்கு அந்த வகை டுரியான் கூழாகவோ, உறைந்த அல்லது குளிர்ந்த வடிவிலோ தான் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது.
அவை முழுப்பழமாகக் கிடைப்பதில்லை.

மாவ் ஷான் வாங் வகை டுரியானுக்குச் சீனாவில் அதிகத் தேவை ஏற்பட்டுள்ளது. ஒரு பழத்தின் விலை $101 வெள்ளிக்கு மேல்.

சீனாவில் டுரியான்களுக்கு அதிக அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை ருசிக்க மக்கள் ஆவலாக காத்திருப்பதாவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்