Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டார்ட்டே Sinopharm-இன் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே (Rodrigo Duterte) Sinopharm-இன் முதல் தடுப்பூசியைப் போட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே (Rodrigo Duterte) Sinopharm-இன் முதல் தடுப்பூசியைப் போட்டுள்ளார்.

COVID-19 நோய்த்தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், தடுப்பூசி போட பொதுமக்களை ஊக்குவிக்கவும், அவர் நேற்று (மே 3) தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தடுப்பூசியை எதிர்பார்த்து நீண்ட காலம் காத்திருந்ததாகத் திரு. டுட்டார்ட்டே கூறினார்.

பிப்ரவரி 22 முதல் மார்ச் 3 வரை Pulse Asia நடத்திய ஆய்வில் 2,400 பேர் பங்கேற்றனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடுப்பூசி போட விரும்பவில்லை என்று பிலிப்பீன்ஸில் 10-இல் 6 பேர் கருதுவதாக ஆய்வில் தெரியவந்தது.

நவம்பரில் நடத்தப்பட்ட அதேபோன்ற கருத்தாய்வில், 47 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசியை மறுக்கப்போவதாகக் கூறியிருந்தனர்.

- Reuters/ga 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்