Images
  • Duterte
    (படம்:  Reuters/Ezra Acayan)

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து பிலிப்பீன்ஸ் அதிபர் சினம்


பிலிப்பீன்ஸில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே (Rodrigo Duterte) சினமடைந்துள்ளார்.

போட்டியில் பங்கேற்கும் விளையாட்டாளர்களுக்கான போக்குவரத்து, தங்கும் வசதிகள் போன்றவை தொடர்பான பல்வேறு புகார்களைத் திரு. டுட்டார்ட்டே பெற்றுள்ளதாக அதிபரின் பேச்சாளர் செல்வடோர் பனெலோ (Salvador Panelo) கூறினார்.

விளையாட்டுகள் நடைபெறும் இடங்களும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாதது குறித்தும் விளையாட்டாளர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படாதது குறித்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அந்தக் குற்றச்சாட்டுகளை அதிபர் டுட்டார்ட்டே விசாரிக்க விரும்புவதாகத் திரு. பனெலோ கூறினார்.

போட்டிகளுக்குப் பிறகு அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை நடத்துவதற்கு ஆதரவு வழங்குவதாக அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறைபாடுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

Top