Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸ் : மின்சிகரெட் பிடிப்போரைக் கைது செய்ய உத்தரவு

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே, மின்சிகரெட் பிடிப்போரைக் கைது செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸ் : மின்சிகரெட் பிடிப்போரைக் கைது செய்ய உத்தரவு

(படம்: Reuters/Adnan Abidi)

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே, மின்சிகரெட் பிடிப்போரைக் கைது செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

அந்நாட்டில், மின்சிகரெட் புகைத்த ஒருவர் நுரையீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மின்சிகரெட் மீதான தடையை அவர் அறிவித்தார்.

மின்சிகரெட்டைப் பயன்படுத்தி நுரையீரல் பிரச்சினையால் ஒருவர் பாதிக்கப்பட்ட முதல் சம்பவம் அது.

மின்சிகரெட் புகைப்பதால் கைது செய்யப்படுவோருக்கு எத்தகைய தண்டனை விதிக்கப்படும் என்பது பற்றித் தகவல் இல்லை.

புகையிலை புகைப்பதைவிட குறைவான ஆபத்தை மின்சிகரெட் ஏற்படுத்தும் என முன்பு கருதப்பட்டது.

ஆனால் மின்சிகரெட் மேலும் அபாயகரமானது என்பதால், சில வட்டார நாடுகள் ஏற்கனவே அதற்குத் தடை விதித்துள்ளன.

பட்டியலில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூர், தாய்லந்து ஆகியவற்றுடன், இப்போது பிலிப்பீன்சும் சேர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்