Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகள் சிவகாசியில் அறிமுகம்

தீபாவளி நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில்  சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசு அறிமுகம் காணவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
இந்தியா: சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகள் சிவகாசியில் அறிமுகம்

படம்: AFP

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தீபாவளி நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில்  சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசு அறிமுகம் காணவிருக்கிறது.

பட்டாசுத் தயாரிப்பு நடுவமான சிவகாசி நகரில் அது அறிமுகப்படுத்தப்படும்.

காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைக்கும் முயற்சியாக இந்திய உச்சநீதி மன்றம் வழக்கமான பட்டாசுகளுக்குச் சென்ற ஆண்டு தடை விதித்தது.

இந்த முறை சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகளைத் தயாரிக்க சில விதிமுறைகளை அது பரிந்துரைத்திருந்தது.

126 தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரகப் பட்டாசுகளால் கரியமில வாயு வெளியேற்றம் சுமார் 30 விழுக்காடு குறையக்கூடும்.

இருப்பினும், சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான பட்டாசு என்று ஏதும் இருக்கமுடியாது என்கின்றனர் சுற்றுச்சூழல் நிபுணர்கள்.

குறைவான ரகப் பட்டாசுகள், விலையும் அதிகம் என்பதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்