Images
  • mahathir (4)
    (படம்:  Bernama)

கிழக்குக் கடற்கரை இரயில் இணைப்புத் திட்ட மறு ஆய்வு தேர்தல் கொள்கை அறிக்கையில் இடம்பெற்ற ஒன்று : மலேசியப் பிரதமர்

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, கிழக்குக் கடற்கரை இரயில் இணைப்புத் திட்ட உடன்பாடு மறு ஆய்வு செய்யப்பட்டது, பக்கட்டான் ஹரப்பான் அரசாங்கத்தின் தேர்தல் கொள்கை அறிக்கைக்கு உட்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இன்று காலை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் அவ்வாறு கூறினார்.

முன்னைய அரசாங்கத்தின் பெருந்திட்டங்கள் அனைத்தும் மறு ஆய்வு செய்யப்படும் என்று தமது கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கை குறிப்பிட்டிருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.

கிழக்குக் கடற்கரை இரயில் இணைப்புத் திட்டம் தொடர்பில்
மலேசியாவும் சீனாவும் சென்ற வாரம் புதிய உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

அதன்கீழ், அந்தத் திட்டத்திற்கு முன்னர் குறிப்பிட்டிருந்த தொகையில் மூன்றில்-ஒரு பங்கு குறைக்கப்பட்டது.

அந்தத் திட்டத்திற்கு 16 பில்லியன் டாலர் செலவாகும் என முன்னர் கூறப்பட்டது.

தற்போது அதைப் பத்தரை பில்லியன் டாலராகக் குறைக்க ஒப்புக்கொண்டது குறித்துச் சீனாவை அவர் பாராட்டினார்.

கிழக்குக் கடற்கரை இரயில் இணைப்புத் திட்டம் 2026ஆம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Top