Images
  • mahathir (3)
    கோப்புப் படம்:  Reuters/Lai Seng Sin

கட்டணமில்லாச் சாலைகள் சாத்தியமில்லை:மலேசியப் பிரதமர் மகாதீர்

விரைவுச்சாலைகளில் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது சாத்தியமாகாது என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

பாலியில் நடைபெற்ற ஆசியான் தலைவர்கள் சந்திப்பின்போது அவர் அவ்வாறு கூறினார்.

பக்கட்டான் ஹரப்பான் தேர்தல் அறிக்கையில் கட்டணமில்லா விரைவுச்சாலை குறித்த வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. அதனைத் தாம் எதிர்த்ததாக டாக்டர். மகாதீர் தெரிவித்தார்.

விரைவுச்சாலைக் கட்டணம் இல்லாமல் இருக்க வேண்டுமானால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.


Top