Images
  • elephant day (1)
    படம்: Reuters

யானைகளைக் கொண்டாடும் குதூகல யானை தினக் கொண்டாட்டங்கள்

தாய்லந்தின் தேசிய விலங்கான யானைக்கு இன்று கிடைத்தது ஒரு சிறந்த விருந்து. தேசிய யானை தினத்தை முன்னிட்டு தாய்லந்தின் அயுத்தயா நகரில் உள்ள Elephant Kraal and Villageல் யானைகளுக்காக இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

கூடை நிறைய வாழைப்பழங்கள், அன்னாசிப்பழங்கள் என யானைகளுக்குப் பிடித்தமான பழ, காய் வகைகள் விருந்தில் அவற்றுக்குப் பரிமாறப்பட்டன.

கொண்டாட்டத்தின்போது, யானைகளின் மீதும் அவற்றின் பாகர்கள் மீதும் புனித நீரை பௌத்த பிக்கு ஒருவர் தெளித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் புராணக் கதைகளில் வரும் போர்க்காட்சியை யானைகள் நடித்துக் காட்டி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தின. எதிரிகளை வீழ்த்த போரில் பல நூற்றாண்டுகளுக்கு வீரர்களை ஏந்திச் சென்ற யானைகள், அரசு விழாக்களிலும் முக்கியப் பங்கு வகித்தன.

இயந்திரங்கள் இல்லாத காலத்தில் கனமான மரத்துண்டுகளைத் தூக்கிச் செல்லவும் யானைகள் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், இன்று தாய்லந்துக்குச் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்காக சுற்றுலாத் தலங்களில் அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தாய்லாந்தில் இன்னும் சுமார் 3,700 யானைகளே வனப்பகுதிகளில் வாழ்வதாகப் பிரிட்டிஷ் வனவிலங்குப் பாதுகாப்பு நிறுவனமான EleAid குறிப்பிடுகிறது.


Top