Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கை: ஆக அதிக எண்ணிக்கையில் யானைகள் கடந்த ஆண்டு மரணம்

இலங்கையில் ஆக அதிக எண்ணிக்கையில் யானைகள் கடந்த ஆண்டு மாண்டதாகச் சுற்றுச்சூழக் குழுக்கள் தெரிவித்துள்ளன. சென்ற ஆண்டில் மட்டும் 361 யானைகள் மாண்டன.

வாசிப்புநேரம் -
இலங்கை: ஆக அதிக எண்ணிக்கையில் யானைகள் கடந்த ஆண்டு மரணம்

படம்: AFP/Ishara S.KODIKARA

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இலங்கையில் ஆக அதிக எண்ணிக்கையில் யானைகள் கடந்த ஆண்டு மாண்டதாகச் சுற்றுச்சூழக் குழுக்கள் தெரிவித்துள்ளன. சென்ற ஆண்டில் மட்டும் 361 யானைகள் மாண்டன.

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு, கடந்த ஆண்டில் தான் யானைகளின் மரண எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது. அவற்றுள் பெரும்பாலான யானைகள் மக்களால் கொல்லப்பட்டவை.

இலங்கையில் சுமார் 7,500 காட்டு யானைகள் உள்ளன. அவற்றைக் கொல்வது சட்டபடி குற்றம். இருப்பினும் யானைகள் கிராமப்புறச் சமூக மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன.

மின்-தடுப்புகள், நஞ்சு, வெடிபொருள் ஆகியவற்றைக் கொண்டு யானைகள் கிராமப்புற மக்களால் கொல்லப்பட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்