Images
  • baby ele

'என்னை நிச்சயமாகக் கண்டுபிடிக்கமுடியாது!' விளக்குக் கம்பத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட யானை

கரும்பைச் சாப்பிட்டுவிட்டு விளக்குக் கம்பத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட யானைக்குட்டியின் படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

தாய்லந்தின் சியாங் மாய் வட்டாரத்தில் ஒரு யானைக்குட்டிக்குப் பசியெடுத்தது.

அருகில் இருக்கும் திடலில் வளரும் கரும்பை யாருக்கும் தெரியாமல் சாப்பிடலாம் என்று எண்ணியது .

இரவு நேரமாக இருந்ததால், மனிதர்கள் யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்த அது நிம்மதியாகக் கரும்பைச் சாப்பிட்டது.

அந்த ஆனந்தம் கொஞ்சநேரம் மட்டுமே நீடித்தது.

மனிதர்கள் சிலர் திடலை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தனர்.

அதைக் கவனித்த யானைக்குட்டி ஒளிந்துகொள்வதற்கு உடனே ஓரிடத்தைத் தேடியது.

சுற்றிலும் திடல்!

ஒளிந்துகொள்வதற்கு இருந்த ஒரே இடம் விளக்குக் கம்பம்... 'ஆஹா! அதற்குப் பின்னால் ஒளிந்துகொண்டால் என்னை நிச்சயமாகக் கண்டுபிடிக்கமுடியாது' என்று எண்ணிய யானைக்குட்டி அதற்குப் பின்னால் நின்றது.

தன் உடல்வாகு எப்படி உள்ளது என்பதை முழுமையாக மறந்துவிட்டது போல்!

யானை விளக்குக் கம்பத்திற்குப் பின்னால் நிற்பது தெளிவாகத் தெரிந்ததால் மனிதர்களும் அதனை எளிதாகக் கண்டுபிடித்தனர்.

அப்போது எடுக்கப்பட்ட யானைக்குட்டியின் படம் இணையவாசிகளின் மனங்களைத் திருடியுள்ளது!

தாய்லந்தில் சுமார் 2,000 யானைகள் வனப்பகுதிகளில் வாழ்கின்றன. 

Top