Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: சிங்கத்தின் மர்மமான மரணம்- கிருமித்தொற்றுக்காகச் சோதிக்கப்படும் யானைகள்

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள வண்டலூர் விலங்கியல் பூங்காவில் சிங்கம் ஒன்று மர்மமான முறையில் மாண்டதை அடுத்து,  அங்குள்ள யானைகளுக்கு COVID-19 கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள வண்டலூர் விலங்கியல் பூங்காவில் சிங்கம் ஒன்று மர்மமான முறையில் மாண்டதை அடுத்து, அங்குள்ள யானைகளுக்கு COVID-19 கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆசிய வகையைச் சேர்ந்த அந்த 9 வயதுப் பெண் சிங்கம், இந்த மாதத் தொடக்கத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

விலங்கியல் பூங்காவில் உள்ள மேலும் 8 சிங்கங்களுக்கு நோய் கண்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து, முன்னெச்சரிக்கையாக அங்குள்ள 28 யானைகளுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யானைகளின் சுவாசப் பாதையிலிருந்தும், ஆசனவாயிலிருந்தும் மாதிரிகள் எடுக்கப்பட்டு, இந்திய விலங்கு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் முடிவுகள் தெரியவரும்.

அவற்றுக்கு கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்