Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மார் மீது தடைகளை விதிக்கத் தயார் - ஐரோப்பிய ஒன்றியம்

மியன்மார் மீது தடைகளை விதிக்கத் தயார் - ஐரோப்பிய ஒன்றியம் 

வாசிப்புநேரம் -
மியன்மார் மீது தடைகளை விதிக்கத் தயார் - ஐரோப்பிய ஒன்றியம்

(படம்: AP)

மியன்மார் மீது தடைகளை விதிக்கத் தயாராய் உள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள், அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குக் காரணமான ராணுவத் தலைவர்களையும், அவர்களது சொத்துகளையும் இலக்காகக் கொண்டு அந்தத் தடைகள் விதிக்கப்படலாம்.

எனினும், அது இறுதிக்கட்ட நடவடிக்கையாகவே இருக்கும் என்று அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.

பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளை மியன்மார் எடுக்கவேண்டுமென ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

சட்டரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டுமென்றும் அவர்கள் கூறினர்.

ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸும் ( Antonio Guterres) அதே கோரிக்கையை முன் வைத்துள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்