Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தற்காலிகமாக மூடப்படும் சீன எவரெஸ்ட் மலை... ஏன்?

திபெத்தின் எவரஸ்ட் மலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் முகாமிற்குச் சுற்றுப்பயணிகள் தற்போது செல்ல இயலாது என சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
தற்காலிகமாக மூடப்படும் சீன எவரெஸ்ட் மலை... ஏன்?

(படம்: Pixabay)

வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்

திபெத்தின் எவரெஸ்ட் மலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் முகாமிற்குச் சுற்றுப்பயணிகள் தற்போது செல்ல இயலாது எனச் சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அங்கே மலை போன்று குவிந்திருக்கும் குப்பைகளைத் அப்புறப்படுத்தும் வரை சுற்றுப்பயணிகள் அங்கு செல்ல இயலாது.

அந்த முடிவு, சென்ற மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த சில நாட்களுக்கு முன்தான் அது மக்களின் பார்வைக்கு வந்திருக்கிறது.

எவரெஸ்ட் மலைப்பகுதி நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது எனும் வதந்தி முதலில் பரவத் தொடங்கியது.

பின்னர் அது தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது.

சில மலையேறிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் அவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் எனச் சீன அதிகாரிகள் உறுதியாகக் கூறியிருக்கின்றனர்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்