Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மின்னியல் குப்பை இறக்குமதிக்குத் தடை விதிக்கும் தாய்லந்து

வீசியெறியப்படும் தேவைப்படாத மின்னியல் குப்பைகளின் இறக்குமதிக்குத் தாய்லந்து தடை விதிக்கவுள்ளது. 

வாசிப்புநேரம் -

வீசியெறியப்படும் தேவைப்படாத மின்னியல் குப்பைகளின் இறக்குமதிக்குத் தாய்லந்து தடை விதிக்கவுள்ளது.

மின்னியல் குப்பையை இறக்குமதி செய்து அவற்றை அப்புறப்படுத்தும் போக்கை மாற்ற முடிவெடுத்துள்ளது தாய்லந்து.

மின்னியல் குப்பையைத் தனது நாட்டில் அப்புறப்படுத்தும் நடைமுறைக்குச் சீனா அண்மையில் தடை விதித்தது.

இதை அடுத்து, சீனாவிற்குப் பதிலாக தாய்லந்தில் அந்தக் குப்பை அப்புறப்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் தாய்லந்து தற்போது புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

பழைய வானொலி பாகங்கள், மின்கலங்கள், கணினிகளின் மின் பாகங்கள் என மொத்தம் 432 வகையான மின்னியல் குப்பைகளை இறக்குமதி செய்வதற்குத் தாய்லந்து தடை விதிக்கும்.

ஆறு மாதங்களுக்குள் இந்தப் புதிய மாற்றம் அமல்படுத்தப்படும்.

தடைசெய்யப்படும் குப்பைகளின் முழுப் பட்டியலை தாய்லந்து அரசாங்கம் விரைவில் வெளியிடும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்