Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீன அதிபரின் பெயர் தவறாக மொழிபெயர்ப்பு - Facebook மன்னிப்பு

சீன அதிபர் சி சின்பிங்கின் பெயரைத் தவறாய் மொழிபெயர்த்ததற்காக Facebook மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சீன அதிபரின் பெயர் தவறாக மொழிபெயர்ப்பு - Facebook மன்னிப்பு

படம்: AFP/Nyein CHAN NAING

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சீன அதிபர் சி சின்பிங்கின் பெயரைத் தவறாய் மொழிபெயர்த்ததற்காக Facebook மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆங்கிலத்தில் இருந்து பர்மிய மொழிக்கு அவரது பெயர் மொழிபெயர்க்கப்பட்டபோது அந்தத் தவறு நேர்ந்தது.

திரு. சி, மியன்மாரின் தலைநகர்  நேப்பிடாவ்வுக்கு மேற்கொண்ட 2 நாள் பயணத்தைப் பற்றிய அந்தப் பதிவு, மியன்மாரின் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூ சியின் (Aung San Suu Kyi) Facebook பக்கத்திலும் இடம்பெற்றிருந்தது.

தவறான மொழிபெயர்ப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாக Facebook நிறுவத்தின் பேச்சாளர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்