Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா: போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனையைத் துடைத்தொழிக்க முயற்சி

இந்தோனேசியக் காவல்துறை, போலியான மருத்துவச் சான்றிதழ்களை விற்பனை செய்து வருவோரை முறியடித்து வருகிறது.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா: போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனையைத் துடைத்தொழிக்க முயற்சி

கோப்புப் படம்: REUTERS/Ajeng Dinar Ulfiana

இந்தோனேசியக் காவல்துறை, போலியான மருத்துவச் சான்றிதழ்களை விற்பனை செய்து வருவோரை முறியடித்து வருகிறது.

கிருமிப் பரவலை முன்னிட்டு நடப்பிலுள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகளை மீறுவதற்காக, அந்தப் போலி மருத்துவச் சான்றிதழ்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

முடக்கநிலை நீடிக்கும் வேளையில், வேலையின்பொருட்டுப் பயணம் செய்யும் அவசியம் பலருக்கு உள்ளது.

அவர்கள், கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க, மருத்துவமனைகளில் இருந்தோ, பொது மருந்தகங்களில் இருந்தோ சன்றிதழ் பெறவேண்டும்.

ஆனால் சிலர், போலிச் சான்றிதழ்களை விலைகொடுத்து வாங்கி அதைத் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

சான்றிதழ்கள் ஒவ்வொன்றும் 3 டாலரிலிருந்து 20 டாலர்வரை விலைபோகின்றன. இந்தோனேசியக் காவல்துறையினர், அப்படிப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை ஏழு பேரைக் கைது செய்துள்ளனர். போலிச் சான்றிதழ்களை இணையத்தில் விற்பனை செய்யும் மூவரையும் அவர்கள் கைது செய்துள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்