Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

போலிச் செய்திகளுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்தது மலேசியா

போலிச் செய்திகளுக்கு எதிரான சட்டத்தை மலேசிய ரத்து செய்துள்ளது. 

வாசிப்புநேரம் -

கோலாலம்பூர்: போலிச் செய்திகளுக்கு எதிரான சட்டத்தை மலேசிய ரத்து செய்துள்ளது.

முன்னைய பிரதமர் நஜிப் ஆட்சியின்போது, இந்த ஆண்டு ஏப்ரலில் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

பொய்ச் செய்திகளைப் பரப்புவோருக்கு ஆறு வரை சிறைத்தண்டனை விதிக்கவோ, ஐந்நூறாயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கவோ அந்தச் சட்டம் வகை செய்தது.

திரு. நஜிப் பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முனைவதாகப் பலரும் அப்போது குறைகூறினர்.

திரு. நஜிப்பின் தேசிய கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி, தனது பிரசாரத்தின்போது பொய்ச் செய்திகளுக்கு எதிரான அந்த சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்திருந்தது.

இன்று (ஆகஸ்ட் 16) நாடாளுமன்றத்தில் சுமார் 3 மணி நேர விவாதத்திற்கு பிறகு அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

தற்போது நடப்பில் உள்ள மற்ற சட்டங்களே போலிச் செய்திகளின் பரவலைத் தடுக்கப் போதுமானவை என்று கூறப்பட்டது.

போலிச் செய்திகளுக்கு எதிரான சட்டம் நீக்கப்பட்டதை மனித் உரிமை குழுக்கள் வரவேற்றுள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்