Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை நஞ்சு வைத்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண்

கேரள மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை நஞ்சூட்டிக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண், இன்று நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வாசிப்புநேரம் -
இந்தியா: குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை நஞ்சு வைத்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண்

( படம்: AFP )

இந்தியா: கேரள மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை நஞ்சூட்டிக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண், இன்று நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது அங்கே கூடியிருந்த பொதுமக்கள் அவரைப் பார்த்துக் கூச்சலிட்டனர்.

2002-க்கும் 2014-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜோலி சாஜு என்ற 47 வயதுப் பெண், 6 பேருக்கு உணவில் சயனைட் நஞ்சு கலந்து கொடுத்துக் கொன்றதாகக் காவல் துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பொற்கொல்லர் ஒருவரிடம் இருந்து அவர் சயனைட் நஞ்சைப் பெற்றுள்ளார்.

காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்ட அந்தப் பொற்கொல்லர், எலித் தொல்லையை ஒழிப்பதற்காக என்று சொல்லியே சாஜு தம்மிடம் சயனைட் வாங்கிச் சென்றதாகக் கூறியுள்ளார்.

மாண்டவர்களில் சாஜுவின் முதல் கணவர், கணவரின் பெற்றோர், அவரது தற்போதைய கணவரின் முன்னாள் மனைவி ஆகியோர் அடங்குவர்.

காவல்துறையினரிடம் சாஜு கொலைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

குடும்பச் சொத்துகளைத் தன்வசம் கொண்டுவரும் நோக்கில், அவர் அந்தக் கொலைகளைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

சாஜுவின் தற்போதைய கணவரின் தந்தை அவரைச் "சிறந்த முன்மாதிரி மருமகள்" எனப் பாராட்டுவதுண்டாம்.

கணவரின் தங்கை, தமது அண்ணி இப்படிப்பட்டவர் என்பதைத் தம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்