Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: கிருமித்தொற்றால் வருமானம் இழந்த விவசாயிகள் தற்கொலை

இந்தியாவில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கடுமையான முடக்கக் கட்டுப்பாடுகள் அந்நாட்டு விவசாயிகளைப் பெரிதும்  பாதித்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியா: கிருமித்தொற்றால் வருமானம் இழந்த விவசாயிகள் தற்கொலை

(படம்: AFP)

இந்தியாவில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கடுமையான முடக்கக் கட்டுப்பாடுகள் அந்நாட்டு விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது.

விவசாயத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கடந்த சில மாதங்களில் தற்கொலை செய்து கொண்டதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வுப் பேராசிரியர் தெரிவித்தார்.

விவசாயத்திற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், அவர்கள் அந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

அத்தகைய சம்பவங்கள் கிருமித்தொற்றுச் சூழலில் கணிசமாக அதிகரித்ததாக The New York Times செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

முடக்கக் கட்டுப்பாட்டால், வழக்கமாக மற்ற மாநிலங்களிலிருந்து வரும் கூலித் தொழிலாளர்கள், இம்முறை வர முடியவில்லை.

அவர்களுக்கான போக்குவரத்துச் செலவை விவசாயிகளே ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம்.

கூலித் தொழிலாளர்களும் சுமார் 3 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்ததால், சுமார் 3 மடங்கு அதிக ஊதியம் கேட்டனர்.

ஒரு வழியாக அறுவடை செய்தாலும், அதைச் சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாத அவலநிலை.

அறுவடையை விற்றுக் காசாக்க முடியாத ஆதங்கத்தில், சிலர் விவசாய நிலத்தைத் தீ வைத்து எரித்தனர்; பல மில்லியன் டாலர் மதிப்பிலான பழங்களையும் காய்கறிகளையும் சாலைகளில் வீசினர்.

இந்திய அரசாங்கம் தங்களுக்கு ஆதரவு அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்