Images
  • father dropped son in ferrari (1)
    (படம்: REUTERS)

Ferrari காரில் மகனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றதற்காகச் சாடப்படும் தந்தை

Ferrari காரில் மகனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றதற்காகக் கடுமையாகச் சாடப்பட்டிருக்கிறார் தந்தை ஒருவர். சீனாவில் நடந்தது சம்பவம்.

தந்தைத் தமது பகட்டை வெளிக்காட்ட விலையுயர்ந்த Ferrari காரில் மகனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதாகப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து, மகனின் வகுப்பில் உள்ள பெற்றோர் அமைத்திருந்த WeChat குழுவிலிருந்து சிறுவனின் தந்தை நீக்கப்பட்டார்.

ஹாங்க்ஸோ நகரத்தில் சொத்து மேம்பாட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த நிர்வாகியாகப் பணிபுரியும் அவரது வருடாந்தர வருமானம் சுமார் 800,000 வெள்ளி.

விலைமதிப்புமிக்க காரில் மகனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றதால் மற்ற மாணவர்களின் பெற்றோர் வகுப்பாசிரியரிடம் புகார் செய்திருந்தனர்.

வேறோரு காரில் மகனைப் பள்ளிக்கு அழைத்து வரும்படி மற்ற பிள்ளைகளின் பெற்றோர் பரிந்துரைத்ததாகவும் வகுப்பாசிரியர் கூறினார்.

இம்மாதிரியான சம்பவங்களால் மாணவர்களிடையே வேற்றுமை அதிகரிக்கலாம் என்றார் அவர்.

சீன சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவம் குறித்து கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டு வருகின்றன. 

Top