Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்த படகு கவிழ்ந்தது - 10 மாணவர்கள் மரணம்

சீனாவின் தெற்கிலுள்ள குவிச்சோ (Guizhou) பகுதியின் ஸாங்கே (Zangke) ஆற்றில் அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்த படகு கவிழ்ந்தது. 

வாசிப்புநேரம் -

சீனாவின் தெற்கிலுள்ள குவிச்சோ (Guizhou) பகுதியின் ஸாங்கே (Zangke) ஆற்றில் அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்த படகு கவிழ்ந்தது.

அதில் 10 பேர் மாண்டனர். மேலும் ஐவரைக் காணவில்லை. படகிலிருந்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என நம்பப்படுகிறது.

Xiling Shipping நிறுவனத்தின் அந்தப் படகில் அதிகபட்சம் 40 பேர் பயணம் செய்யலாம். ஆனால், அதில் 46 பேர் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

மீட்புப் பணியாளர்கள் 31 பேரைக் காப்பாற்றியுள்ளனர். அவர்களில் நால்வர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

குவிச்சோவில் கனத்தமழை பெய்யலாம் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது. ஸாங்கே நகரில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அதனாலும், அதிகமானோர் ஏற்றப்பட்டிருந்ததாலும் படகு கவிழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்