Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கிற்கான பயணப் பதிவுகள் குறைந்துள்ளன: பயண நிறுவனங்கள்

சிங்கப்பூரில் உள்ள பயண நிறுவனங்கள் ஹாங்காங்கிற்கான பதிவுகள் கடந்த மாதத்திலிருந்து குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கிற்கான பயணப் பதிவுகள் குறைந்துள்ளன: பயண நிறுவனங்கள்

படம்: AFP/Philip Fong

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரில் உள்ள பயண நிறுவனங்கள் ஹாங்காங்கிற்கான பதிவுகள் கடந்த மாதத்திலிருந்து குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.

ஹாங்காங்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் அதற்கு முக்கியக் காரணம்.

அங்கு செல்வோர் தங்களின் பாதுகாப்புக் குறித்து அக்கறை தெரிவித்துள்ளதாய்ப் பயண நிறுவனங்கள் கூறியுள்ளன.

Dynasty Travel பயண நிறுவனம் கடந்த மாதம் ஹாங்காங்கிற்கான பதிவுகள் மற்றும் விசாரிப்புகளில் 50 விழுக்காட்டுச் சரிவை எதிர்நோக்கியதாகத் தெரிவித்தது.

CTC பயண நிறுவனம், கடந்த மாதமும் இம்மாதமும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாகப் பதிவுகள் சற்றுக் குறைந்துள்ளதாகக் கூறியது.

இருப்பினும் கடந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து சுமார் 56,500 சுற்றுப்பயணிகள்  வருகை புரிந்ததாக ஹாங்காங் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், அது 4.7 விழுக்காடு அதிகம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்