Images
  • handcuff
    படம்: Jeremy Long

பங்களாதேஷ்: உணவில் முடி இருந்ததால் மனைவியின் தலைமுடியைச் சவரம் செய்த கணவர்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பங்களாதேஷில் காலை உணவில் முடி இருந்ததால் சினமடைந்து மனைவியின் தலைமுடியைப் பலவந்தமாகச் சவரம் செய்த ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜொய்புராட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள கிராமத்தில் காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 35 வயது பப்லு மொண்டால் (Bablu Mondal) பிடிபட்டார்.

கிராமவாசிகள் பப்லுவின் செயல்குறித்துத் தகவல் அளித்திருந்தனர்.

வேண்டுமென்றே ஒருவரைக் காயப்படுத்தியதாகவும் தம்முடைய 23 வயது மனைவியை மானபங்கம் செய்ததாகவும் பப்லுமீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்தகைய நபர்களுக்கு அதிகபட்சத் தண்டனையாக 14 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


Top