Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் தீயில் சிக்கிமாண்ட சகோதரர்கள்

கோத்தா கினபாலு: மூன்று சகோதரர்கள்.. அவர்களில் இருவர் இரட்டையர்.

வாசிப்புநேரம் -

கோத்தா கினபாலு: மூன்று சகோதரர்கள்.. அவர்களில் இருவர் இரட்டையர்.

சபா மாநிலத்தில் செம்பொர்னா நகரின் ஆலையொன்றில் தீ மூண்டது.

ஆலையிருந்த பகுதியில் அதன் ஊழியர்கள் தங்குமிடத்தில் இருக்கும் ஒரு வீட்டில் அந்தச் சகோதரர்கள் தீயில் மாட்டிக்கொண்டனர்.

இரட்டைச் சகோதரர்களின் வயது 5, மாண்ட மற்றொரு சகோதரனுக்கு வயது 4.

தீ மூண்டபோது மூவரும் வீட்டில் தனியாகத்தான் இருந்திருக்கின்றனர்.

தந்தை அவர்களின் தாயை அழைத்துவர வெளியில் சென்றிருந்த நேரம்.

வீட்டின் பின்புறக் கதவு தாழிட்டிருந்தது. மாண்ட சகோதரர்கள் வீட்டின் கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

முன்புறக் கதவு பூட்டப்படவில்லை.

வீட்டுக்குத் திரும்பிய பெற்றோர் தீசூழ்ந்த கோலத்தைக் கண்டு பதறிப்போயினர்.

தந்தை எவ்வளவோ முயன்றும் பிள்ளைகளைக் காப்பாற்ற முடியவில்லை.

மரத்தாலான வீடு என்பதால் தீ வேகமாகப் பரவியது.

பிள்ளைகள் தீக்குச்சிகளைக் கொண்டு விளையாடிக் கொண்டு இருந்திருக்கலாம் என்று காவல்துறையின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்ததாக ஸ்டார் நாளேடு கூறியது.

சின்னஞ்சிறு பிள்ளைகளின் கருகிய உடலைக் கண்ட தீயைணப்பாளர்களுக்கு உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அத்ந இடமே சோகம்நிறைந்து காணப்பட்டதாக நாளேடு தெரிவித்தது.

தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது தீ மிகக் கடுமையாகக் கட்டுக்கடங்காதபடி பரவியிருந்தது. அவர்கள் முயன்றவரை போராடிப் பார்த்தனர். பிள்ளைகளைக் காப்பாற்ற முடியவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்