Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புதுடில்லி தீ விபத்து: உயிரைப் பணயம் வைத்து 27 பேரைக் காப்பாற்றிய வீரர்கள்

புதுடில்லித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் உயிரைப் பணயம் வைத்து 27 பேரைக் காப்பாற்றிய தீயணைப்பாளர்கள் இருவர் 'வீரர்களாக' போற்றப்பட்டுள்ளனர். அந்தத் தீச்சம்பவத்தில் 43 பேர் மாண்டனர். 

வாசிப்புநேரம் -
புதுடில்லி தீ விபத்து: உயிரைப் பணயம் வைத்து 27 பேரைக் காப்பாற்றிய வீரர்கள்

படம்: AP/Manish Swarup

இந்தியா: புதுடில்லித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் உயிரைப் பணயம் வைத்து 27 பேரைக் காப்பாற்றிய தீயணைப்பாளர்கள் இருவர் 'வீரர்களாக' போற்றப்பட்டுள்ளனர். அந்தத் தீச்சம்பவத்தில் 43 பேர் மாண்டனர்.

அந்தத் தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதை அறிந்து கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பாளர் ராஜேஷ் சுக்லா 11 பேரைத் தொழிற்சாலையிலிருந்து வெளியே தூக்கிச் சென்றார். அதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. தொழிற்சாலையில் அதிகமானோர் சிக்கியிருப்பது குறித்து யாரும் தம்மிடம் தெரிவிக்கவில்லை என்று Times of India நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

அங்கு குறைந்தது 30 பேர் இருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலோர் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

மற்றொரு தீயணைப்பாளரான அஷிஷ் மாலிக் 16 பேரின் உயிரைக் காப்பாற்றினார். பல சிரமங்களைக் கடந்து அவர்களை மீட்டார். 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்