Images
  • trans cabbie first india
    (படம்: AFP/MANJUNATH KIRAN)

புதிய பாதையைத் தெரிவு செய்து வெற்றியை நோக்கி விரைந்து செல்லும் திருநங்கை

நீண்ட, கருமையான கூந்தலைச் சீவி, கண்களில் மை பூசிக்கொண்டு டாக்சியில் ஏறினார் மேக்னா சாஹு. டாக்சி ஓட்டுநராக அவர் தம் முதல்நாள் பணியைத் தொடங்குகிறார்.

இந்தியாவின் முதல் திருநங்கை டாக்சி ஓட்டுநராகக் கருதப்படும் அவர், இந்தியாவின் தென்கிழக்கு மாநிலமான ஒரிஸாவில் பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்கிறார்.

ஒரிஸாவில் பெரும்பாலும் ஆண்களே டாக்சி ஓட்டுநர்களாக உள்ளனர். அந்தப் போக்கில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் மேக்னா.

பெண்களால் எந்த வேலையையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்குப் பொருத்தமான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தபோது இந்தப் பணி மேக்னாவிற்குக் கிடைத்தது.

பொருளியல் ரீதியாக நல்ல வளர்ச்சி கண்டிருந்தாலும், இன்று வரை பழமையான பாரம்பரியத்தைப் பின்பற்றும் நாடாகவே இந்தியா கருதப்படுகிறது.

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள் இந்தியாவில் அமங்கலமாகக் கருதப்படுகின்றனர்.

பாலியல் தொழிலில் ஈடுபடுவது, பிச்சை எடுப்பது, பணம் பறித்தல் போன்ற செயல்களின் மூலம் அவர்கள் சம்பாதித்துக் கொள்வது வழக்கம்.

நிலையான வருமானம் ஈட்டிப் பிழைக்கப் போராடும் திருநங்கையரிடையே, புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துப் புத்தொளி பாய்ச்சியிருக்கிறார் மேக்னா.  

Top