Images
  • japan fish
    படம்: AFP/KAZUHIRO NOGI

மீண்டும் திறந்துள்ளது ஜப்பானின் பிரபல மீன் சந்தை

ஜப்பானின் பிரபலமான சூகிஜி (Tsukiji) மீன் சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று (அக்டோபர் 11) அதிகாலையிலிருந்து மீன்கள் ஏலத்தில் விடப்பட்டன.

உலகத்தின் ஆகப்பெரிய மீன் சந்தையான சுகிஜி மீன் சந்தை ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் வேறோர் இடத்திற்கு மாறியது.

முதலில் இருந்த இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் இந்தப் புதிய சந்தை முன்பைக் காட்டிலும் இரண்டு மடங்கு பெரியது.

புதிய சந்தை அதிநவீன குளிர்சாதன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற சுகிஜி சந்தையில் முன்பு நடைபெற்ற டியூனா ஏலக்குத்தகையில் மீன்கள் ஆயிரக்கணக்கான டாலர் விலையில் உணவகங்களுக்கு விற்கப்பட்டன.

அதே துடிப்புடன் நேற்றும் பெரிய டியூனா மீன்கள் ஏலத்தில் விற்பனையாயின.

ஆனால் சற்று குறைவான விலையிலேயே அவை விற்கப்பட்டன.

83 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தை மூடப்பட்டது.


Top