Images
  • flipkart
    படம்: REUTERS

இந்தியாவிலுள்ள 70,000 பேருக்கு வேலை வழங்க முன்வந்துள்ள Walmart-டின் Flipkart நிறுவனம்

வால்மார்ட்டின் (Walmart) Flipkart நிறுவனம் இந்தியாவிலுள்ள சுமார் 70,000 பேருக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரப்போவதாக அறிவித்துள்ளது.

இணையத்தில், "Big Billion Days" என்ற பெயரிலான விற்பனைத் திட்டத்தின்மூலம்,
இவ்வாண்டு Flipkart அதன் ஆகப் பெரிய விழாக்கால விற்பனையை நடத்தவுள்ளது.

அமசான் நிறுவனத்தின் Prime Day-க்கு நிகரான விற்பனைத் திட்டம் அது.

சுமார் 4, 5 நாள்கள் நடத்தப்படும் அந்த இணைய விற்பனை, இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பித்து தீபாவளியன்று முடிவுறும்.

அந்த விற்பனைத் திட்டத்தில், 50,000 மளிகைக் கடைகளையும் சேர்த்துக்கொள்ளப் போவதாக Flipkart குறிப்பிட்டது.

விநியோக மேலாளர்கள், பொருள்களைச் சேகரித்து வகைப்படுத்துவோர், அடுக்குவோர்-எனப் பல தரப்பினருக்கு நேரடி வேலை கிடைக்குமென Flipkart தெரிவித்தது.

அவர்களைத் தவிர, அந்த மாபெரும் விற்பனையின்மூலம் பல்லாயிரம் பேருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்பு உருவாகுமென்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

இணையவர்த்தகம் இப்போது அதிகப் பிரபலமாகி வருகிறது.

குறிப்பாக, கோவிட்-19 சூழலில் அதற்கான தேவை இன்னும் அதிகரித்துள்ளது.

அதனால், தொடர்ந்து அதிகமானோருக்கு வேலை வாய்ப்பளிக்க முடியுமென Flipkart கருதுகிறது.  

Top