Images
  • landslide update
    படம்: AFP/Sai Aung MAIN

மியன்மார்: நிலச்சரிவில் மாண்டோர் எண்ணிக்கை 48க்கு உயர்ந்தது - மீட்புப் பணியில் ராணுவம்

மியன்மாரின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாண்டோரின் எண்ணிக்கை 48க்கு அதிகரித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ராணுவப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மோன், கரேன், காசின் மாநிலங்களில் பெய்த அடைமழையால் சாலைகளும் பாலங்களும் சேதமடைந்தன.

வெள்ளத்தில் சிக்கியோருக்கு உணவுப் பொருள்களை விநியோகிக்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

4000க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள 25,000க்கும் அதிகமானோர் பௌத்த மடாலயங்களில் தஞ்சமடைந்துள்ளதாக அந்நாட்டின் Global New Light of Myanmar நாளேடு தெரிவித்தது.


Top