Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காதலியை நிலவுக்கு அழைத்துச் செல்லவிருக்கும் ஜப்பானின் செல்வந்தர்

ஜப்பானியச் செல்வந்தர் யூசாக்கு மேஸ்வா (Yusaku Maezawa) தம்முடன் நிலவுக்குச்  செல்ல ஒரு காதலியைத் தேடிவருகிறார்.

வாசிப்புநேரம் -
காதலியை நிலவுக்கு அழைத்துச் செல்லவிருக்கும் ஜப்பானின் செல்வந்தர்

படம்: Reuters/Toru Hanai

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஜப்பானியச் செல்வந்தர் யூசாக்கு மேஸ்வா (Yusaku Maezawa) தம்முடன் நிலவுக்குச்  செல்ல ஒரு காதலியைத் தேடிவருகிறார்.

நிலவில் தயாராகும் ஓர் ஆவணப் படத்தில் அவர் நடிக்கவுள்ளார், அதற்காகத் தற்போது ஒரு காதலி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

காதலியின் வயது 20க்குமேல் இருக்கவேண்டும் என்பது நிபந்தனை. காதலிக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் வரும் 17ஆம் தேதி.

44 வயது மேஸ்வா, தமது Zozo இணையத் தளத்தை அண்மையில் விற்றார்.

தற்போது தாம் கொஞ்சங்கொஞ்சமாகத் தனிமையை உணர்வதாகவும் அதனால் ஒரு துணையைத் தேடி வருவதாகவும் கூறினார்.

நிலவுக்குச் செல்லும் பயணம் 2023 ஆண்டு தொடங்குகிறது, அதை ஏலன் மஸ்க்கின் SpaceX நிறுவனம் வழிநடத்துகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்