Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மலேசியாவின் முன்னாள் நிதியமைச்சர் மறுத்துள்ளார்

மலேசியாவின் முன்னாள் நிதியமைச்சர்  லிம் குவான் எங் (Lim Eng Guan), அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மலேசியாவின் முன்னாள் நிதியமைச்சர் மறுத்துள்ளார்

படம்: AFP/Mohd RASFAN

மலேசியாவின் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் (Lim Eng Guan), அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

பினாங்கு கடலடி சுரங்கத் திட்டத்தில், திரு. லிம் தம்முடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி 800,000 டாலர் பயனடைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மலேசிய ஊழல் ஒழிப்புத் துறையினர் சில மாதங்கள் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு சென்ற வாரம், திரு. லிம் கைது செய்யப்பட்டார்.

பினாங்கு கடலடிச் சுரங்கத் திட்டம் தொடர்பில் ஒன்றரை பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஊழல் நடந்திருப்பதாகத் திரு.லிம் மீது சென்ற வாரம் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால், அவர் அந்தக் குற்றச்சாட்டையும் மறுத்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்