Images
  • homeless
    படம்: Reuters 

நியூயார்க்: வீடற்றவர்கள் நால்வர் அடித்துக் கொலை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

நியூயார்க்கின் சைனாடவுன் பகுதியில் சாலையோரமாகத் தூங்கிக் கொண்டிருந்த நான்கு ஆடவர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் கடுமையாகக் காயமடைந்துள்ளார்.

கொல்லப்பட்டோரின் சடலங்கள் சாலையின் வெவ்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன.

அவர்களைக் கொன்ற சந்தேகத்தின் பேரில் மற்றொரு வீடற்ற ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடவர்கள் இரும்புத் தடியால் அடித்துக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. அவர்கள் தாக்கப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

கருப்பு நிற ஆடை அணிந்த ஓர் ஆடவர், வீடற்றவர்களைத் தாக்கிவிட்டு ஓடியதாக சம்பவ இடத்துக்கு அருகே இருந்தவர்கள் கூறினர்.


Top