Images
  • POLICE
    (கோப்பு படம்: AP)

மனசைத் திருடிய மங்கை, கண்டுபிடிச்சுக் கொடுங்க சார்.... காவல்துறையை நாடிய காதலர்

இந்தியாவின் நாக்பூர் நகரத்தில் உள்ள காவல்துறையினருக்கு ஒரு வித்தியாசமான புகார் வந்திருந்தது.

ஒரு பெண் தம் மனதைத் திருடிவிட்டதாகவும் அதைத் திரும்ப கண்டுபிடித்துதருமாறும் ஆடவர் ஒருவர் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.

அதைச் சற்றும் எதிர்பாராத காவல்துறை அதிகாரி, செய்வது அறியாது தம் உயர் அதிகாரியின் உதவியை நாடியுள்ளார்.

இந்தியச் சட்டத்தில் இதுபேன்ற திருட்டு குற்றமாக வகைப்படுத்தப்படவில்லை என்பதால் இதை ஏற்க முடியாது என்று கூறிய அதிகாரிகள், ஆடவரின் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.

பொருள்கள் காணவில்லை என்று புகார் வந்தால் கண்டுபிடித்துக் கொடுக்கலாம் ஆனால் இதுபோன்ற புகார்கள் அவ்வப்போது வருவதால் கொஞ்சம் தொல்லையாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top