Images
  • gandhi
    (படம்: Reuters)

காந்தி பிறந்தநாளன்று களவுபோன அவரது அஸ்தி

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

இந்தியாவின் தேசத்தந்தையாகப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளன்று அவரது அஸ்தி களவுபோனது.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அவரது நினைவிடத்திலிருந்து அஸ்தி திருடப்பட்டதாய் அதிகாரிகள் கூறினர்.

அங்கிருந்த காந்தியின் உருவப்படத்தைச் சிதைத்த திருடர்கள் அதன் மீது "துரோகி" என்று பச்சை வண்ணத்தில் கிறுக்கியிருந்தனர்.

திருடர்களின் செயலை அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் ஒன்று வகைப்படுத்தினர்,காவல் அதிகாரிகள். தேசிய ஒற்றுமையைக் குலைக்கும் அந்த நாசவேலைக்குத் தகுந்த தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அஸ்தியைக் களவுபோகவிட்டது அவமானத்துக்குரியது என்றார் நினைவிடத்தின் நிர்வாகி.

1948-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு அவரது நல்லுடல் எரியூட்டப்பட்டது. ஆனால் இந்து சமயப்படி அது நதிகளில் கரைக்கப்படாமல், இந்தியாவில் உள்ள பல்வேறு 'காந்தி நினைவிடங்களுக்கு' அனுப்பப்பட்டது. அதில் ஒன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள "பாபு பவன்".

இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒற்றுமையை வலுப்படுத்த காந்தி மேற்கொண்ட முயற்சிகள் இன்றளவும் சர்ச்சைக்குள்ளாகின்றன. திருட்டுச் சம்பவம், அவரது கொள்கையை எதிர்ப்போரின் செயலாக இருக்கவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

Top